Dr.ஷாபி விவகாரம்: குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு

NEWS
0
குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் சஹாப்டீன் சாபி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் சரத் ரணவீர பண்டார என்பவருக்கு எதிராகவே இவ்வாறு நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


மருத்துவர் சாபீ கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் பக்கச்சார்பாகவும் உண்மைக்கு புறம்பான வகையிலும் பணிப்பாளர் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top