தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவரும் Face App செயலி உபயோகத்தினால் பாவனையாளர்களின் கைத்தொலைபேசியுள்ள தரவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு, பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இந்த செயலியை நிர்மாணித்த நபர், இந்த செயலியை உபயோகிக்க வேண்டாம் எனத் டுவிட்டர் பதிவொன்றின் மூலமாக டுவிட்டர் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததையடுத்தே இந்த சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது பிரத்தியேக கொள்கை கோவையில் இந்த செயலியை உபயோகிக்கும் பாவனையாளர்களினால் பதிவேற்றப்படும் புகைப்படங்களை எவ்வளவு காலத்துக்கு சேமித்து வைத்திருப்பர் என இந்த செயலியை நிர்மாணித்தவர்கள் குறிப்பிடத்தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த செயலி நிறுவப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளில் காணப்படும் புகைப்பட கோப்புகளுக்குள், பாவனையாளர்களுக்கு தெரியாமலேயே ஊடுறுவக்கூடிய இயலுமை காணப்படுவதாகவும் ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, தமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இவ்வாறான செயல்களை பயன்படுத்த வேண்டாம் என அச்சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.
Post a Comment