கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக கருத்து தெரிவிக்கும் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் நிலை இலங்கையினுள் காணப்படுகிறது.
இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரியவந்ததாவது, இலங்கையில் மட்டுமல்லாது பல நாடுகளிலிருந்தும் தொடர்ந்து வரும் அழுத்தம் காரணமாக வெவ்வேறு நாடுகளில் பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை தீர்மானிக்க அந்தந்த நாட்டின் அரசாங்கத்திற்கு பேஸ்புக் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்க பிரதிநிதிகளால் பொருத்தமற்றதாகக் கருதப்படும் எந்தவொரு கணக்கையும் பக்கத்தையும் அகற்ற பேஸ்புக் ஒப்புக் கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் சட்டரீதியான சட்டங்களின்படி அரசாங்கம் செயல்படுவது ஒரு விஷயம், அரசாங்கத்தின் தேவைக்கேற்ப செயற்படுவது வேறு விடயம். அதன்படி, பேஸ்புக் தனது பயனர்களை பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கு காட்டிக் கொடுத்துள்ளது.
இலங்கையில் பேஸ்புக் இப்போது ஜனாதிபதி ஊடக பிரிவில் பணிபுரியும் ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அரசியல் நோக்கங்களுக்காக பேஸ்புக் கணக்குகள் மற்றும் பக்கங்களை மூட முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
ல.நியூ.வெ
Post a Comment