Top News

முஸ்லிம் MPக்களை சந்தித்த பின்,ஞானசாரவுக்கு தொலைபேசியில் எச்சரித்த மைதிரி

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளரான ஞானசார தேரரை தொலைபேசியுடாக தொடர்புகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பிரசாரங்கள் தொடர்பில் தனது அதிருப்பிதினைய வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை இரவு ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றது.

நீங்கள் விடுதலை செய்த ஞானசார தேரர், இன்று உலமா சபையை விமர்சித்து - முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுந்தொனியில் பேசி வருகிறார். ஜனாதிபதி என்ற ரீதியில் உடனடியாக நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்தே ஜனாதிபதி, ஞானசார தேரரை தொலைபேசியில் தொடர்புகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான சகோதர இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், 

இந்த சந்ததிப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஏ.எச்.எம்.பௌசி, பைசர் முஸ்தபா, எம்.எஸ்.அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூப் பைசல் காசீம், எம்.ஐ.எம்.மன்சூர், எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன்.

நீங்கள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த ஞானசார தேரர் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகிறார் என்பதை ஜனாதிபதியிடம் நேரில் தெரித்ததுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடுந்தொனியில் அவர் பேசி வருகிறார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் உடனடியாக நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். இதனையடுத்து ஜனாதிபதி, ஞானசார தேரரை தொலைபேசியுடாக தொடர்புகொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தனது அதிருப்தியினை வெளியிட்டார்.

அத்துடன் தொடச்சியாக இவ்வாறு மேற்கொண்டால் மீண்டுமொரு தடவை என்னால் உங்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக அப்பாவி முஸ்லிம்கள் 34 பேர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரினோம்.

இது தொடர்புடைய அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பான முக்கிய விடயங்களை ஜனாதிபதியுடன் பேசி தீர்வுகளை பெற்றுக்கொண்டோம் என்றார். 

விடியல்

Post a Comment

Previous Post Next Post