A/L பரீட்சையில் முஸ்லிம் பெண்களுக்கு பர்தாவை கழற்றுமாறு வற்புறுத்தல்!

NEWS
0
நாட்டின் சில பகுதிகளில் பர்தாவை கழற்றி விட்டு பரீட்சைக்கு வருமாறு வற்புறுத்தப்பட்ட சம்பவங்கள் சில பதிவாகியுள்ளது.

குறிப்பாக வெலிமடை தமிழ் வித்தியாலயத்தில் இன்று காலை A/L பரீட்சை எழுத சென்ற சுமார் 40 மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பர்தாக்களை அகற்றிய சம்பவமொன்றும் பதிவாகியுள்ளது.

நிட்டம்புவ சங்கபோதி கல்லூரி, குமாரிமுல்ல மற்றும் ரன்பொகுனுகம பகுதி பாடசாலைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் கூட்டாக இணைந்து சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுமென சட்டத்தரணி சறூக் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top