நிந்தவூரில் குழந்தை ஒன்று கடலில் மூழ்கி மரணம்

NEWS
0


நிந்தவூர் 9ம்,பிரிவைச் சேர்ந்த இல்லியாஸ் , நிஸா" தம்பதிகளின் குழந்தை முகம்மட் ஆதில்" ஒன்னரை வயது ஆண் குழந்தை இன்று காலை கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளது.

"இன்னாலிலாஹி வஇன்னாயிலைகி ராஜுஹுன்"

குறித்த குழந்தையின் அப்பா " அதாவது குழந்தையின் உம்மாவின் தந்தையார் குழந்தையை கடற்கரைக்கு கூட்டிச் சென்று குழந்தையை கடற்கரை ஒரத்தில் விளையாட விட்டுவிட்டு குழந்தையை கவனிக்காத போது குழந்தையை கடல் அடித்துச் சென்றுள்ளது. குழந்தை கடலில் மூழ்கியதும் அறியாது சற்று நேரத்திற்கு பிறகு குழந்தையை அங்கும் இங்கும் தேடிப்பாத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப வந்து வீட்டாரிடம் குழந்தையை காணவில்லையென கூறிவிட்டு திரும்பவும் கடற்கரைக்கு தேடிச் சென்றபோது சுமார் 800 மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கரையொதிங்கிய நிலையில் மீனவர்கள் கண்டெடுத்ததாக அப்பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மரணமடைந்த குழந்தையின் உடலை 
நிந்தவூர் ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பொலிசாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.

முஹம்மட் ஜெலீல், நிந்தவூர் 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top