இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் இருக்கின்றது என வெளியிடப்படும் கருத்துக்கள் அரசியல் ரீதியானவை எனவும், அதனை சிறுபான்மை மக்கள் பெரிதாக விடயமாக கருத வேண்டியதில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த போது அந்த நாட்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் முஸ்லிம் பயங்கரவாதம் செயற்படுகின்றது எனக் கூறப்படுவதை அரசியல் ரீதியான கருத்ததாகவே நான் காண்கின்றேன். முஸ்லிம் மக்கள் தலைவர் என்ற முறையில் இதனை கூறுகிறேன்.
இந்த கருத்துக்கள் தொடர்பாக முஸ்லிம்களோ, தமிழர்களோ அச்சம் கொள்ள தேவையில்லை.
நாட்டில் மீண்டும் அப்படியானதொரு நிலைமை ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.
புலனாய்வு பிரிவினர், பாதுகாப்பு தரப்பினர் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment