ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காலமான குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் இறுதிக்கிரியைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு முன்னர் அண்மையில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment