அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பாக கையடக்க தொலைபேசி பற்றிய தரவுகள் அடங்கிய அறிக்கை ஒன்றை குற்ற புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட குண்டுதாரிகள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நபர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகள் சிலவும், கையடக்க தொலைபேசியின் பாகங்கள் சில உள்ளிட்டவற்றின் தரவுகள் தொடர்பாக 5 அறிக்கைகள் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினால் குற்ற புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றபுலனாய்வு திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயவரத்தனவிடம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை நேற்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க விசாரணைப்பிரிவான FBI இனால் அனுப்பப்பட்ட இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கை என்றும் அதற்கு அமைவாக இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
- தகவல் திணைக்களம் -
Post a Comment