ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகியிருந்த சிலர் மீண்டும் கட்சியில் இணைவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாசவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
இதேவேளை அண்மையில் ஐக்கிய தேசிய கட்சி பிரதிநிதிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாசுதேவ நாணயக்கார கோதாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இருந்தவர் என்பதுடன் பின்னர் அவருக்கு ஆதரவளித்திருந்தாலும் கோதாபயவுக்கு எதிரான அவரது கருத்தில் மாற்றமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியை போன்று மஹிந்த ராஜபக்ஷ சார்பிலும் பெறுமதியான வாக்குகள் அவருக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளில் இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிய பிரபல உறுப்பினர்கள் தொடர்பிலும் ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும் எத்ர்வரும் தினங்களில் எதிர்பாராத விதத்தில் பல மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment