Top News

தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட பின்னரே எங்கள் அறிவிப்பு வரும் : ரிஷாத் பதியுதீன்

தங்களுடைய கட்சி எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிற்கான நாள் குறிக்கப்பட்ட பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கேள்வி - ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் எவ்வாறான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளீர்கள்? 

தற்போது ஐக்கிய தேசிய முன்னணியில் இருப்பதாக தெரிவித்த அவர், புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கேள்வி - நீங்கள் அரசியல் கட்சி என்ற ரீதியில் எவ்வாறான வேட்பாளருக்கு ஆதரவு வழங்க உள்ளீர்கள்? 

இது தொடர்பில் முன்னரே கூறியதாகவும், நாட்டிற்கு அன்பு செலுத்தும் சமதானம் மற்றும் நல்லினக்கத்தை நாட்டினுள் ஏற்படுத்தக்கூடிய, பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய தலைவர் ஒருவருக்கே ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

கேள்வி - சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளதே? 

அந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அதன் பின்னர் தங்களது கட்சி முடிவு எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கேள்வி - ஐக்கிய தேசிய கட்சி முடிவெடுத்தால் நீங்கள் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவீர்களா? 

அதை அந்த நேரத்தில் பார்ப்போம் என தெரிவித்த அவர், தேர்தல் எப்போது என்று உறுதியான தினம் ஒன்று இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

கேள்வி - ராஜபக்ஷர்களிடம் இருந்து அழைப்பு வரவில்லையா? 

பார்ப்போம் நேரம் வரும் போது அது பற்றி சொல்வோம் என தெரிவித்துள்ளார். 

கேள்வி - பிரதரருக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதா? 

தங்கள் தற்போதும் பிரதமருடன் ஐக்கிய தேசிய முன்னணியில் அமைச்சராக இருப்பதாகவும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post