நிகாப், புர்கா மற்றும் முகத்தை மூடும் வகையில் அணியும் தலை கவசம் என்பவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் பிரச்சினைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல்வாதிகளின் தேவையின் அடிப்படையில், இந்த தடையை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிகாப் மற்றும் புர்காவை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து மக்களிடம் இருந்தது. நாமும் இது தொடர்பான யோசனைகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். இவற்றை தடையும் யோசனை அரசாங்கம் கொண்டு வரும் என எதிர்பார்த்தோம். எனினும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய அரசாங்கம் அதனை கொண்டு வரவில்லை எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.