இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கடந்த சில தினங்களாக கடமையில் இருந்து விலகி முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையில் மாற்றம் இடம்பெற்றிருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் இன்றும் நாளையும் பொதுமக்களிற்கான சேவைகள் மாத்திரம் நடத்தப்படும் என்று செயலாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தில் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் நேற்று தீர்மானம் ஒன்றுமேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
இதற்கு அமைவாக இன்றும் நாளையும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை கடமைகளுக்கு சமூகமளிக்க தீர்மானித்தோம். பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானங்களை மேற்கொண்டோம்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலையினால் எற்பட்ட தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டோம். இன்றும் நாளையும் வரையறுக்கப்பட்ட வகையில் கடமைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணிகளையும் முன்னெடுத்துள்ளோம். இருப்பினும் எமது கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு கிடைக்காவிட்டால் நாம் மீண்டும் கடமைகளை புறக்கணிப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-தகவல் திணைக்களம்-
Post a Comment