இரகசிய பொலிஸாரால் தான் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோமானது என்று உத்தரவிடக் கோரி குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (27) புவனெக அலுவிஹாரே மற்றும் மூர்து பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்த வழக்குடன் தொடர்புடைய சில அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் பெற்றுத் தருமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் கோரியிருந்தார்.
அதன்படி, குறித்த அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக அரச சட்டத்தரணிக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுத்த உயர் நீதிமன்றம் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோமாக சிங்கள பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு சத்திர சிகிச்சை செய்தமை மற்றும் சட்டவிரோதமாக சொத்து சேகரித்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிஹாப்தீன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment