நூருள் ஹுதா உமர்
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக சர்வதேச கரையோர தூய்மைப்படுத்தல் தினம் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதனடிப்படையில் சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வானது இன்று (20) காரைதீவு கடற்கரை பிரதேசத்தில் பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் திரு. வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும் மற்றும் ஜனாப்.எ. எம்.அப்துல் லத்தீப் அவர்களும் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்கள். மேலும் இந்நிகழ்வில் சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் திரு.கி.சிவகுமார் அவர்களும்,பிரதேச சபை தவிசாளர் கெளரவ. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்களும், படைப்பிரிவின் 241 வாது கட்டளையிடும் தளபதி திரு.வி.ஜே.கே. விமலரத்ண அவர்களும், ஏனைய படைப்பிரிவினர் மற்றும் ஏனைய அரச, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,மாணவர்கள்,பொ துமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
இதன் போது காரைதீவு கடற்கரை பிரதேசமானது மாணவர்கள், படையினர்,பொதுமக்கள் பிரதேச சபை மற்றும் ஏனைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சுத்தப்படுத்தப்பட்டது.
இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பொறுப்பில் வைத்து மக்கள் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகவும் அக்கறையோடு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment