Top News

ஆடைச் சுதந்திரம், முஸ்லிம் மக்களிடத்திலிருந்து பறிக்கப்பட்டு வருகிறது..!



மனித அடிப்படை சுதந்திரங்களில் ஒன்று ஆடைச் சுதந்திரமாகும்.  இந்த சுதந்திரம் முஸ்லிம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நடைபெற்ற துன்பவியல் நிகழ்வின் பின்னர் அவசரகாலச் சட்டம் அமுல் படுத்தப்பட்டபோது முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைவிவகாரம் விஸ்பரூபம் எடுத்து முகத்திரைக்கான தடைவிதிக்கப்பட்டது.

எனினும் கடந்த 8ஆம் திகதி அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்ட நிலையில்  ஆடை அணிவது தொடர்பான விவகாரம் முற்றுப்பெறவில்லை. எனவே இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க அரசியல் தரப்புகள் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர்    நஸிர் அஹமட் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:- 

பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பினர் வசம் இருப்பதன் காரணமாக சமீபத்தில் முகத்திரையை அணிந்து சென்ற முஸ்லிம் பெண்கள் அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. 

இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபையும்- முகத்திரையை அணிந்துபொது இடங்களுக்கு செல்லாமல் காலநேர சூழலை அனுசரித்து சாதுர்யமாகநடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் இது விடயத்தில் தீர்க்கமான ஒரு முடிவை எட்டவேண்டியது அவசியமாகும் என்றார்.   

Post a Comment

Previous Post Next Post