Top News

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு முயற்சி..!



ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற மீனவ குடும்பங்களைச் சேர்ந்த அமைப்புகளின் தேசிய சம்மேளனம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

இந்த நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "மீனவ மக்களுக்கு நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் புரிதல் உள்ளது. அரசியல் தொடர்பிலும் புரிதல் உள்ளது. இந்த நிலைமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர் யார்? அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசியலமைப்பை மாற்றி இரண்டு அதிகார கேந்திரங்களை அமைத்தனர். 

இது ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான மோதல். பழிவாங்குவதற்கு சூழ்ச்சி செய்ததன் ஊடாக நாட்டிற்கு எதையும் செய்ய முடியவில்லை. இன்று கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய சூழ்ச்சி நடக்கிறது. 

இன்று வரை அவர்களின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய வில்லை. இன்று சஜித் பிரேமதாச அவர்களின் வேட்பாளர் என கூறுகின்றனர். இவர்கள் இருவரின் மோதல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது. 

அந்த பிரச்சினை கிராமத்திற்கு வந்தது. இவ்வாறு பிரதமர் ஜனாதிபதிக்கு இடையில் மோதலை வைத்துக் கொண்டு எவ்வித பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது. இந்த நிலை மாற வேண்டும். ஒரு நிலையான கொள்கையை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். 

அதற்காகதான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை நியமித்துள்ளது" என்றார்.

Post a Comment

Previous Post Next Post