Top News

சவூதி அரேபியாவின் அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு..!


அரம்கோ தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே பொறுப்பு என கடந்த சனிக்­கி­ழமை சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அடெல் அல்-­ஜு­பையிர் தெரி­வித்தார்.
அரம்­கோ­வினை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்­கான ஏவு­கணை வடக்குப் பக்­கத்­தி­லி­ருந்தே வந்­தது, யெம­னி­லி­ருந்­தல்ல, ஏவு­கணை ஏவப்­பட்ட இடத்­தினைக் கண்­ட­றி­வ­தற்கு சவூதி அரே­பியா முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது என அடெல் அல்-­ஜு­பையிர் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் தெரி­வித்தார்.

சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் நிறு­வ­ன­மான அரம்­கோவின் எண்ணெய் வயல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் ஈரா­னிய ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்­தியே மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத­னால்தான் தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே பொறுப்பு எனக் கூறு­கின்றோம்.

சவூதி அரே­பிய அர­சாங்­கத்­திற்குச் சொந்­த­மான பெரும் எண்ணெய் நிறு­வ­ன­மான சவூதி அரம்­கோ­வினால் நடத்­தப்­படும் இரு எண்ணெய் வயல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஆளில்லா விமானத் தாக்­குதல் கார­ண­மாக அங்கு பாரிய தீ ஏற்­ப­ட்டுள்­ள­தோடு அங்கு உற்­பத்­திக்கும் ஏற்­று­ம­தி­க­ளுக்கும் தடங்கல் ஏற்­பட்­டது.

இத் தாக்­கு­த­லுக்கு கடந்த செப்­டெம்பர் 14 ஆம் திகதி யெமனின் ஹெளதி கிளர்ச்­சிக்­கா­ரர்­களால் உரிமை கோரப்­பட்­டது. யெமனில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் சவூதி தலை­மையி­லான கூட்டுப் படை­யினர் ஈரானின் ஆத­ர­வுடன் செயற்­பட்டு வரும் ஹெளதி கிளர்ச்­சிக்­கா­ரர்­க­ளுடன் மோதல்­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். ஆயி­ரக்­க­ணக்­கான யெமன் மக்கள் இது­வரை கொல்­லப்­பட்­டுள்ள அதே­வேளை பஞ்­சத்தின் விளிம்­புக்கும் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

ஈரானின் ஆத­ர­வு­ட­னான ஹெள­தி­களின் நடுத்­தர மற்றும் நீண்ட தூர கண்­டம்­விட்டுக் கண்டம் பாயும் ஏவு­க­ணைகள் சவூதி அரே­பிய வான் பாது­காப்புப் பிரி­வி­னரால் அடிக்­கடி நடுவானில் அடையாளம் காணப்படுகின்றன. அவை சவூதி அரேபியாவின் முக்கிய சொத்துக்களையும் இடங்களையும் இலக்கு வைத்து ஆயுதம் பொருத்தப் பட்ட ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவப்படுபவையாகும்.

Post a Comment

Previous Post Next Post