Top News

ஊவா மாகாணத்தில் எங்காவது புர்கா அணிந்து சென்றால் கைது செய்யப்படுவீர்கள்- மைத்திரி குணரத்ன..!



புர்கா அணிய விதிக்கப்பட்ட தடை அவசரகாலச் சட்டம் அமுலில் இல்லாத காரணத்தினால், அதற்கான தடை நீங்கினாலும் ஊவா மாகாணத்தில் அந்த தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அந்த மாகாணத்தின் ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஊவா மாகாணத்தில் எங்காவது புர்கா அணிந்து சென்றால், அதனை அணிந்து செல்லும் நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஊவா சமூக வானொலியில் இடம்பெற்ற நேரடி நேர்காணல் ஒன்றில் புர்கா தடை நீக்கம் பற்றி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மதத்திற்காக நாட்டையும் மக்களையும் பணயம் வைக்க முடியாது. நான் அடிப்படைவாதி அல்ல. இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு மிகவும் சிரமமான காலக்கட்டத்தில், ஞானசார தேரருக்கு எதிராக குரல் கொடுத்தவன். முஸ்லிம், பௌத்த, தமிழ் எந்த அடிப்படைவாதமாக இருந்தாலும் அதனை நான் எதிர்ப்பவன் எனவும் மைத்திரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post