Top News

மஹிந்த அணியில் சிலர் , சஜிதுடன் இணைய முஸ்தீபு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (27) காலை கம்பஹா பிரதேசத்தில் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயற்பட கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய கூட்டமைப்பு ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசேட சம்மேளனம் ஒன்றை நடாத்தி கூட்டமைப்பின் வேட்பாளரை முன்னிறுத்துவதாக தெரிவித்த அவர், இதனை வெற்றிக்கான கூட்டமைப்பாக அனைவரும் ஒரு பொது தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொள்கை கட்டமைப்பில் தேசிய பிரச்சினைக்கான ஒரு தௌிவான தீர்வினை ஆராய்வதாகவும், வேலைவாய்ப்பு பிரச்சினை, பொருளாதார மற்றும் அனைத்து பிரச்சினைகளும் கொள்கை அறிவிப்பில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச நிபந்தனைகளின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதாக எவரும் கூறவில்லை என தெரிவித்த காவிந்த ஜயவர்தன, கட்சியின் ஜனநாயக கட்டமைப்பில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த முன்பு இருந்தே குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

கட்சியினுள் சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், அவை கலந்துரையாடப்பட்டு தீர்க்கப்பட்ட பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி 2010 மற்றும் 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ´அன்னம்´ சின்னத்தில் போட்டியிட்டதாகவும், அதன்படி பாரிய விரிவான படையணி ஒன்றை உருவாக்க இம்முறையும் ´அன்னம்´ சின்னத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post