இம்ரான்கானுக்கு அன்புக் கட்டளையிட்ட சவுதி இளவரசர் சல்மான்..!

NEWS
0

எங்கள் நாட்டுக்கு வருகை தந்த விருந்தாளி பயணிகள் விமானத்தில் செல்வதை என்னால் அனுமதிக்க முடியாது எனவும்,தாங்கள் என்னுடைய தனி விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்ல வேண்டும் எனவும் சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமர் இம்ரான்கான் வெளிநாட்டு பயணங்களின் போது பிரதமருக்கான தனி விமானத்தில் செல்லாமல் மக்களோடு மக்களாக பயணிகள் விமானத்தில் சென்றுவருகிறார்.
இந்த நிலையில் 2 நாள் விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சவுதி அரேபியா சென்றுள்ளார். அவருடன் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி, நிதி ஆலோசகர் ஹபிஸ் ஷாயிக் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்கா புறப்பட இம்ரான்கான் தயாராகியுள்ளார்.  வழக்கம் போல் அவர் பயணிகள் விமானத்தில் அமெரிக்கா செல்ல ஆயத்தமானபோதே இளவரசர் சல்மான் இவ்வாறு கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top