Top News

RDHS அலாவுதீனை எரித்த பொத்துவில் மக்கள்!



கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். அலாவுதீனுக்கு எதிராக பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், பொதுமக்கள், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலைப் பணியாளர்கள் இணைந்து, நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டதோடு, அவரின் உருவ பொம்மையினையும் எரித்தனர்.

இதேவேளை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகத் தெரிவித்து, இன்றைய தினம் பணிப் பகிஷ்பிலும் ஈடுபட்டனர்.

Post a Comment

Previous Post Next Post