Top News

வடக்கு, கிழக்கு இணைப்பு சம்மந்தமாக SLMC விடுக்கும் நிபந்தனைக்கு இணங்கும் வேட்பாளருக்கு கட்சி ஆதரவு ...!


வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்க வேண்டும் என தமது கட்சி, ஜனாதிபதி வேட்பாளருக்கு நிபந்தனை விதிக்கும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிபந்தனைக்கு இணங்கும் வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றாக இணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார்.

நான் அதனை கடுமையாக எதிர்க்கின்றேன். வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது. அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொலிஸ் அதிகாரங்களை கோருகிறது.

இது இந்த நாட்டுக்கு சரியில்லை. நாட்டுக்காக எம்மிடம் ஒரு கொள்கை இருக்கின்றது. உரிய நேரத்தில் நாங்கள் அதனை வெளியிடுவோம்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தலில் அதனை வேறு விதமாக அணுக வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதியுயர் பீடம் கூடி வேட்பாளர்கள் முன்வைத்துள்ள கொள்கைகளை ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post