இன்று காலை அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நிதி அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாச செய்யவேண்டிய விடயங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆராயப்பட்டது.
முக்கியமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் தொடர்ந்தும் கட்சியின் தலைவர்காவும் இருப்பார், அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்து ஆறுமாத காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும்.
என்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இவை இரண்டையும் அடிப்படியாக வைத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான பரந்த கூட்டணியை அமைப்பது, கட்சியின் தலைமைத்துவத்தை பிரதானதப்படுத்திய அரசாங்க நகர்வுகளை கொண்டுசெல்வது மற்றும் புதிதாக முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் என்பனவும் தேர்தலில் வாக்குகளை தக்கவைக்கவும் முன்னெடுக்கும் நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment