ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக் ஷவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மாற்று வேட்பாளர் ஒருவரை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து எதிரணி ஆலோசித்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை 2 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.
4 ஆம் திகதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இடைக்கால தடையுத்தரவு ஏதேனும் வழங்கப்பட்டால் மாற்று வேட்பாளர் ஒருவரை தயார் படுத்துவது நல்லது என்ற நிலைப்பாட்டை எதிரணி கொண்டுள்ளதாக தெரிகின்றது.
இந்த விடயம் தொடர்பில் நேற்றுமாலை எதிரணியின் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
Post a Comment