அனைத்து தீவிரவாதிகளையும் இல்லாதொழித்து நாட்டில் சுதந்திரத்தை ஏற்படுத்திய பின்பும் எப்பொழுது தீவிரவாதம் ஆரம்பிக்குமென்று கூறிவிட முடியாது. இதனை இல்லாதொழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்தார்
அத்துடன், ஒரே நாடு ஒரே தேசம் என்னும் கருப்பொருளுக்கு அமைய நாட்டை ஒன்றிணைக்க வேண்டுமென்று தெரிவித்த அத்துரலிய ரதன தேரர், நாட்டுக்கான ஒரு தேசிய கொள்கையை உருவாக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
ராஜகிரிய சதஹம் செவனவில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தமிழ், சிங்கள மக்கள் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம் நாட்டுக்கான ஒரு தேசிய கொள்கையினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனை கருத்தில் கொண்டு நாங்கள் விஜய தரணி சங்கத்தினை ஆரம்பித்து உள்ளோம். வெற்றியையும் நாட்டின் பாதுகாப்பினையும் ஏற்படுத்தி ஒரே நீதியின் கீழ் இந்த நாட்டை கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். நாட்டுக்கு நிலையான வளர்ச்சியொன்று அவசியம். அதனை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
அனைத்து தீவிரவாதிகளையும் இல்லாதொழித்து நாட்டில் சுதந்திரத்தை ஏற்படுத்திய பின்பும் எப்பொழுது தீவிரவாதம் ஆரம்பிக்குமென்று கூறிவிட முடியாது. இதனை இல்லாதொழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். நாட்டினை நேசிக்க கூடிய அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாட்டை ஒன்றுபடுத்தல் தொடர்பான எமது சங்கத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தார்.
Post a Comment