உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடந்து சமூக வலைத்தளங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக பதிவேற்றப்பட்டு வந்த கருத்துக்கள் ஒரேயடியாக ஆகஸ்ட் மாதம் நிறுத்தப்பட்டமைக்கு காரணம் அந்த செயல்களை செய்த நபர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளமையே என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான கருத்துக்களே சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பதிவேற்றப்பட்டு வந்தன. தம்பியா, ஹலால் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வன்முறைகளை தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பட்டன.
ஆனால் இவ்வாறான பதிவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தமாக இல்லாது செய்யப்பட்டன. ஏன் அவ்வாறான பதிவுகள் இப்போது வருவதில்லை அதற்கு காரணம் அந்த செயல்களை செய்த நபர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளார் என்பதுவே, என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment