பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டாவுக்கு ஆதரவு : பைஸர் முஸ்தபா

NEWS
0


சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள அரசாங்கமொன்றுக்கு, சிறுபான்மையினர் ஆதரவு வழங்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு பாரிய பலமொன்று கிடைக்கும் என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 70 வீதம் வாக்குகளைப் பெற்ற நிலையில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன், ஜனாதிபதித் தேர்தலிலும் கோத்தபாய ராஜபக்ஸ நிச்சயமாக வெற்றி பெறுவார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனில், யுத்தத்தை வெற்றி கொண்ட கோத்தபாய ராஜபக்ஸவே தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top