இது நேற்று எதிர்பார்த்ததுதான்.
சந்திப்பு நடந்து வெளியே வரும் போதே மனதில் பட்டதுதான்.
நாலு பேரை நினைத்தேன்.
மூன்று உள்ளக்குள்ளேயே புகைகின்றன.
ஒன்று குமுறி கொட்டி இருக்கிறது.
அவ்வளவுதான்......
சகோ. பசீர் சேகுதாவூத் ஒன்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரல்ல.
அதன் ஆரம்ப போராளியுமல்ல.
அப்போது அவர் ஈரோஸில் இருந்தார்.
ஆயுத கவர்ச்சியில் அள்ளுண்டு ஈரோஸ் முகாமிலிருந்தார்.
அவரொன்றும் ஈரோஸின் சிந்தாந்த புருஷரல்ல.
ஆயிரம் போராளிகளில் அவரும் ஒருவர்.
அதன் முன்னணி போராளியுமல்ல.
அதன் ஒரு மூலையில் கிடந்தவர்.
முகாம்களை தாக்கி முன்னேறிய அனுபவமில்லை.
முடங்கி பதுங்கி வாயை வைத்து வங்காளம் போயிருந்தார்.
அதன் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றார்.
பின்னர், இரத்தமும் சதையும் நிறைந்த தமிழர் போராட்டத்தின் நம்பிக்கையை கொன்று, அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்றவர்.
இப்படி, மு.கா வின் ஸ்தாபக காலத்தில் வேறு முகாமிலிருந்தவர்;
மு.கா வின் ஆரம்ப போராளிகளில் ஒருவரல்லாதவர்;
அஷ்ரப் - பிரேமதாச உறவின் பங்காளரில்லாதவர்;
அஷ்ரப் - பிரேமதாச உறவை பற்றி பேச முடியுமாயின்.......
பிரேமதாசவின் மகன்;
அவருடைய இரத்தம்;
அவரின் வீட்டிற்குள் இருந்தவர்;
அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது 22 வயதுடைய வாலிபன்;
இன்று ஜனாதிபதி வேட்பாளராக வளர்ந்திருப்பவர்;
அறிந்திருக்கவும்; பேசவும் முடியாதா? என்பதை சகோ. பசீர் சேகு தாவூத் கூற வேண்டும்.
அப்போதைய மு.கா தலைவர் அஷ்ரப், தனது தந்தையை ஜனாதிபதியாக்குவதிலும்; தனது தந்தைக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை தேற்கடிப்பதிலும் ஆற்றிய பங்களிப்புக்களை நினைவுகூர்ந்து ஹக்கீம் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதில் முன்னணியில் நின்றாற்றிய பங்கையும்; எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்குவதில் ஆற்ற இருக்கும் பங்களிப்புக்களையும் - சஜித் பிரேமதாச சிலாகித்து நினைவு கூர்வது - சகோ. பசீர் சேகு தாவூதிற்கு பிடிக்காதுதான்.
ஏன்எனில், இரத்தமும் சதையும் நிறைந்த தமிழர் போராட்டத்தின் நம்பிக்கையை கொன்று; அவர்களின் வாக்குக்களில் தனக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்று துரோகம் செய்த சகோ. பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்?
பாராளுமன்ற உறுப்பினராக தான் இருந்த காலம் - 05 வருடங்கள் பூர்த்தியாகாத நிலையில் - தனக்கு ஓய்வூதியம் பெறுவதற்கு 06 மாத காலங்கள் பாராளுமன்ற தேசிய பட்டியலை தாருங்கள் என்று கேட்டு மு.காவின் தேசிய பட்டியலை கபடத்தனமாக பெற்று - பின்னர் அதனை வைத்தை இரண்டு தடைவைகள் தேசியப்பட்டியல் பெற்று - இறுதியில் தனக்கு தேசிய பட்டியல் தராமையால் - ஏலவே 03 முறை தனக்கு தேசியப்பட்டியல் தந்த தலைவர் றஊப் ஹக்கீமிற்கு எதிராக அசிங்கமான குற்றங்களை முன்வைத்து துரோகமிழைத்த சகோ.பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்?
கட்சியின் தவிசாளராக இருக்கும் போதே - கட்சிக்கும் தலைமைக்கும் தெரியாமல் பின்கதவால் சென்று - மகிந்தவிடம் அமைச்சினை பெற்று வந்து தனக்கு தெரியாமலே எல்லாமே நடந்தது போல நாடகமாடி சமூகத்தையும் கட்சியையும் தலைமையையும் ஏமாற்றிய சகோ. பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்?
தானில்லாத மு.கா அழிந்து போய்விடும் அல்லது நான் அழிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெறி பிடித்தலைந்த சகோ. பசீர் சேகு தாவூதிற்கு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் மு.காவும் அதன் தலைவர் றஊப் ஹக்கீமும் பிரதான பங்கு வகிப்பதையும் - மு.கா தன்னுடைய வெளியேற்றத்திற்கு பின்னால் புதிய உத்வேகத்துடன் மக்கள் தீர்மானங்களை நோக்கி நகர்வதையும் சகிக்க முடியாமல் இருக்கும் சகோ. பசீர் சேகு தாவூத்திற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்?
சஜீத் வென்றால் - தனது அரசியல் முடிந்துவிடும்; ஹக்கீம் எங்கோ போய்விடுவான் என்ற சகோ. பசீர் சேகு தாவூத்தின் கொடூர மனநிலையை - அவர் கட்சியின் தவிசாளரிலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் எழுதிய எனது ஒரு கவிதையை இங்கு மீள்பதிவிடுவதன் மூலம் விளங்கிக்கொள்ள வழிவிடுகிறேன்.
உன் சிலம்புகள்
எங்கே?........
மதுரையை எரித்து
உனக்காய் பழி கொள்ள
நீ உத்தமனல்ல
சாக்கடையின் கரையில்
புழுக்களின் எச்சம் - நீ
ஊனத்தில் உறுஞ்சும்
அருவருப்பு - நீ
அழகிய தமிழில்
நீ அழுதாலும்
அரங்கம் இனி திறவாது
தெருக்கோடியில்
உன் கூத்துக்கள்
வெளுத்துப் போயிட்டன - இனி
கூட்டமே கூடாது
நீ எய்தது
உன்னையே நொந்து விட்டது
நீதான்
தொடங்கினாய்
பழைய வித்தையை
இப்போது ஆடிப் பார்
அல்லது
ஆடிப் பார்ப்போம் - வா
உன் சிலம்புகள்
எங்கே?
உன் பரதம்
எங்கே?
வீணையின் நரம்புகள்
நீ மட்டும் வாசிக்கவல்ல
இப்போது புரிந்திருப்பாய்
நாதங்களை மீட்ட
நீ கற்கவில்லை
ஒலியை மயக்கி
அடிமை கொள்ளக் கற்றுக்கொண்டாய்
நீ வித்தைகளைக் கற்கவில்லை
விற்பதையே கற்றுக்கொண்டாய்
இன்று நீயே
சந்தைத் தெருவில்
விலையில்லாப் பண்டமாக
- ஏ.எல். தவம் -
Post a Comment