பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌசி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை இன்று -27- முன்வைத்தார்.
தான் கூறாத கருத்தொன்றை தவறான முறையில் ஊடகங்கள் வௌியிட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவர் இன்று சென்றிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் A.H.M.பௌசி தெரிவித்ததாவது,
எனது உரையை திரிவுபடுத்தி வௌியிட்டு, எனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக நான் வந்தேன். நான் கூறாத கருத்தொன்றை வௌியிட்டுள்ளனர். இந்த கட்சியை நாம் பாதுகாக்க வேண்டும் எனின், இந்த தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவை தோற்கடிக்க வேண்டும் என கூறினேன். தோற்கடிக்க வேண்டும் என கூறிய வார்த்தையை தவறான வகையில் ஹிரு மக்களுக்கு ஔிப்பரப்பாக்கியுள்ளது. இதன் ஊடாக எமது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது என குறிப்பிட்டார்.
பின்னர் பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று, தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
Post a Comment