கூச்சலிடுபவர்கள் தாக்கப்படுவர் - சுதந்திரக் கட்சி எச்சரிக்கை...!

NEWS
0


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எச்சரிக்கையொன்றை விடுத்தார்.

நாட்டை நேசிக்கும் மக்கள் கூச்சலிடுவோரைத் தாக்குவார்கள் என்பதே அந்த எச்சரிக்கை.

உங்களின் அருகில் இருந்து எவரேனும் கூச்சலிடுகின்றார்கள் எனின், கூச்சலிடும் நபரை அந்த இடத்திலேயே கீழே தள்ளுமாறு கூட்டங்களுக்கு வருபவர்களிடம் கூறுகின்றோம். இந்த நாட்டை நேசிக்கும் எவரேனும் இருந்தால், கூச்சலிடுபவரை கீழே தள்ளுங்கள். கீழே தள்ளும் போது பிரச்சினைக்கு தீர்வு கிட்டும். அதற்கான அனைத்து விடயங்களையும் மக்களுக்கு நாம் இன்று தௌிவூட்டி வருகின்றோம். எமக்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. கால், கைகள் முறிந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை. நாட்டை நேசிப்பவர்கள் கூச்சலிடுபவர்களைத் தாக்குவார்கள். அவர்களின் கை, கால்களை முறிப்பார்கள். அந்தளவு மக்கள் நாடு தொடர்பில் அக்கறையாகவுள்ளனர். அதனால் கவனமாக செயற்படுங்கள்.
என வீரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top