எமது நாட்டிலுள்ள மதம் மற்றும் சமயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஏனைய மதங்களையும் இனங்களையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்காள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மதங்களும் தனித்தனி கலாசாரத்தைக் கொண்டவை. அவற்றில் நாம் தலையீடு செய்யப் போவதில்லையென தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இளைஞர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனான திறந்த கலந்துரையாடலும் நேற்று திங்கட்கிழமை (22) அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு மெரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன் போது முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் வினவப்பட்ட போதே சஜித் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், நான் ஒரு சிறந்த சிங்கள பௌத்தர். புத்தரின் கோட்பாட்டின் பிரகாரம் சகல உயிரினங்களும் துன்பமில்லாமல் வாழவேண்டும். எந்தவொரு இன பேதத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன். எனவே, இதனடிப்படையில் நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் பூரண பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன்.எமது நாட்டில் எந்தவொரு இனத்தவருக்கோ அல்லது மதத்தினருக்கோ அடிப்படைவாதத்தில் செயற்பட இடமளிக்க மாட்டேன் என்பதை விசேடமாக கூறவிரும்புகின்றேன். இனவாதம், மதவாதம் கடைப்பிடிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டேன்.
நான் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவது இந்த நாட்டுக்கு தீமூட்டுவதற்காக அல்ல. நாட்டை பாதுகாக்கவும், முன்னேற்றவும், அபிவிருத்தி செய்வதற்குமே நான் ஜனாதிபதியாக வர விரும்புகிறேன். இந்தப் பயணத்தில் யாரும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. எல்லோரும் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மானம் இல்லாத வேசைப்புள்ள கள்ள கலாநிதி பஹாது, கொப்பி அடிக்கிறதுக்கும் ஒரு எல்லை இருக்கனும் இந்தா நீ எடுத்த லிங் https://www.sonakar.com/2019/10/blog-post_797.html
ReplyDeletePost a Comment