ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித் சடலமாக மீட்பு..!

NEWS
0


இந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் அவரை மீட்கும் பணிகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன.

நான்கு நாட்களுக்குப் பின்னர் குழிக்குள் இருந்து நேற்றிரவு 10.30 மணியளவில் சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top