முன்னாள் தேசிய காங்கிரஸின் அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைவதற்காக இரகசிய பேச்சு வார்த்தைகளை அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய முடிகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் இரகசியமாக பேசியதற்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (15) கொழும்பில் இடம்பெறவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இன்றைய சந்திப்பின் பின் முஸ்லிம் காங்கிரஸின் இணைவதற்காக முஸ்தீபுகள் நடைபெறுவதாகவும் தெரியமுடிகின்றது. அத்துடன் ஏலவே அனைத்து கட்சிகளுடன் பேசுவதாக அறிவித்த உதுமாலெப்பை திடீரென முஸ்லிம் காங்கிரஸின் இணைந்தமை பெரும் ஏமாற்றத்தை அவர் சார்ந்த ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்தது.
குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் அதிகாரத்தை உச்சப்படுத்துவார் என்று நம்பியிருந்த அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை வழங்கியதாகவும் மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் எந்த விதமான பேச்சுக்களை பேசாமையும் ஏமாற்றத்தை வழங்கியதாகவும் அறிய முடிகின்றது.
உதுமாலெப்பையை கட்சியில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அவர்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஹக்கீம் திட்டமிடுகின்றாரா என நசீர் எம்பியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சந்தேகம் நிலவுகின்றதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment