Top News

கோத்தாபயதான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக வேண்டும் - அடம்பிடிக்கிறது ஐ.தே.க..!



(நா.தினுஷா)

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தபா­யவின் இரட்டை குடி­யு­ரிமை விவ­காரம் குறித்து அவ­ருக்கு எந்த சிக்­கலும் இல்லை என்றால் நீதி­மன்ற விசா­ர­ணைக்கு செல்ல வேண்டும், கோத்­தா­பய கள­மி­றங்­கினால் மாத்­தி­ரமே இந்த தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­னணி பெரும் வெற்­றியை பெற முடியும். ராஜ­பக்ஷ குடும்­பத்தில் யார் வேட்­பா­ள­ராக கள­மிங்­கி­னாலும் சவா­லாக அமைய போவ­தில்லை என்று ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­பால ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்தார்.

மேலும் கூட்டு எதி­ர­ணியில் இடம்­பெறும் குடும்ப ஆதிக்­கத்­தினால் தினேஷ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச, உதய கம்­பன்­பில, பந்­துல குண­வர்­தன ஆகி­யோ­ருக்­கென்று தனி­யான அடை­யாளம் இல்­லாமல் போயுள்­ளது. இந்­நிலை நீடிக்­கு­மாக இருந்தால் எதிர்­கா­லத்தில் அவர்­க­ளுக்கு நாட்டை ஆள்­வ­தற்­கான அதி­காரம் எதுவும் கிடைக்க போவ­தில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

அங்கு மேலும் ஹெட்­டி­யா­ராச்சி கூறி­ய­தா­வது,

இந்த ஜனா­தி­பதி தேர்தல் புதிய பய­ணத்தின் ஆரம்­ப­மாக அமைந்­துள்­ளது. ஐக்­கிய தேசிய கட்சி ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்­வதில் நெருக்­க­டியை சந்­தி­துள்­ள­தாக எதிர் தரப்­பி­னரும் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருந்­தார்கள். இந்­நி­லையில் பிர­த­மரின் முழு ஒத்­து­ழைப்­புடன் சஜித்தை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்­ளளோம். சஜித்தை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மித்­ததன் பின்னர் கோத்­தா­ப­யவின் அணி நடுத்­தெ­ருவில் நிற்­கி­றது.

இவ்­வ­ளவு காலமும் கோத்­தாவின் குடி­யு­ரிமை விவ­கா­ரத்தில் காணப்­பட்ட பிரச்­சினை வெளி­வந்­துள்­ளது. இந்த விட­யத்தை மூடி மறைக்க முடி­யாது. அவரின் கட­வுச்­சீட்டை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள நீதி­மன்றம் முன்­வந்­துள்­ளது. 2005 ஆம் ஆண்டு சுற்­றுலா விசா­வி­னூ­டாக இங்­கு­வந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப்­க­ஷவின் அர­சாங்­கத்தில் பாது­காப்பு செய­லா­ள­ரா­கவும் பணி­யாற்­றினார். பாது­காப்பு செய்­லா­ள­ராக நாட்­டுக்கு ஓர­ளவு பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தாலும் சட்­டத்­துக்கு புறம்­பாக செயற்­பட்டார். மீண்டும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்­காக முன்­வந்­துள்ளார்.

கோதாவின் குடி­யு­ரிமை தொடர்­பி­லான நீதி­மன்ற தீர்ப்பு அவ­ருக்கு பாத­க­மாக அமை­யு­மாக இருந்தால் அடுத்த வேட்­பா­ளரும் ராஜ­ப­க்ஷக்­களின் குடும்­பத்தை சேர்ந்­த­வ­ரா­கவே இருப்பார். ஆகவே எதிர்­த­ரப்பில் காணப்­படும் இந்த குடும்ப ஆதிக்­கத்­தினால் தினேஷ் குண­வர்­தன, விமல் வீர­வன்ச , பந்­துல குணவ்­ர­தன ஆகியோர் தனது அடை­யா­ளத்தை இழந்­துள்­ளனர். இவர்­க­ளுக்கு சவாலோ அல்­லது நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான அதி­கா­ரமோ இல்லை. ஆகவே இறு­தியில் இவர்­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யா­கு­வ­தற்கோ அல்­லது பிர­த­ம­ரா­கு­வ­தற்கோ வாய்ப்பு கிடைக்க போவ­தில்லை.

ஆகவே சர்­வா­தி­கா­ரத்தின் பண்­பு­களை கொண்­டுள்ள இந்த குடும்ப ஆட்­சி­யி­லி­ருந்து மீண்டு வெற்­றி­க­ர­மான பாதையை நோக்கி செல்ல ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­மை­யி­லான எங்­களின் அணி­யுடன் கைகோர்க்­கு­மாறு சகல மக்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கிறோம். மேலும் ஒரு­சில கார­ணங்­க­ளுக்­காக இன்று அர­சாங்­கத்­துக்குள் குழப்ப நிலையை தோற்­று­விக்க ஒரு­சிலர் முயற்­சிக்­கி­றார்கள். போதைப்­பொருள் வியா­பா­ரத்­தையும் பாதாள குழுக்­களின் கலாச்­சா­ரத்­தையும் நாட்டில் தோற்­று­வித்­த­வர்­களே இன்று ஆட்சி பீடம் ஏறி­யதும் இந்த செயற்­பா­டு­களை முற்­றாக ஒழிப்போம் என்றும் மக்­க­ளிடம் வாக்­கு­றுதி வழங்கி வரு­கி­றார்கள்.

சக­லரும் ஒன்­றி­ணைந்து மஹிந்த கோத்தா ஆதிக்­கத்தை தோற்­க­டிப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நீதித்­துறை சுதந்­திரம் இருப்­பதால் நாட்டின் சகல மக்­களும் சட்­டத்­துக்கு மதிப்­ப­ளிக்க கூடி­ய­வர்கள். இருப்­பினும் எதிர்­த­ரப்பில் எவரும் முறை­யாக விசா­ர­ணை­க­ளுக்கு முன்­வ­ரு­வ­தில்லை. தனது குடி­யு­ரிமை தொடர்­பான விவ­கா­ரத்­துக்கு நீதி­மன்­றத்­துக்கு செல்ல பய­மாக இருந்தால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்­கான அவ­சியம் இல்லை. ஆகவே அவர் மீது குற்றம் இல்லை என்றால் நீதிமன்ற விசாரணைக்கு தைரியமாக எதிர்க்கொள்ள வேண்டும்.

எனவே ராஜபக்ஷ குடும்பத்தில் யார் வேட்பாளராக களமிங்கினாலும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலாக அமைய போவதில்லை. எங்களுடன் போட்டியிடக் கூடிய திறமையான வேட்பாளர் ஒருவர் எதிரணியில் இல்லை. எது எவ்வாறாயினும் எதிரணியிலிருந்து யார் வேட்பாளராக களமிறங்கினால் கோத்தாபய இந்த தேரத்லில் களமிறங்கினால் மாத்திரமே எங்களால் வெற்றியடைய முடியும்.

Post a Comment

Previous Post Next Post