ஏ.எச்.எம் பௌசியினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் ஹிரு தொலைக்காட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது.
தொட்டலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு ‘கோட்டாபயவை கொலை செய்வோம்’ என்ற தான் தெரிவித்ததாக திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டதாகவே பௌசி தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பௌசியின் இந்த அறிக்கை தொடர்பில் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தனது கடமை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் தான் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பதாகவும் தற்போது அது தொடர்பில் சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் RepublicNext இணையத்தளத்திற்கு பௌசி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனியார் ஊடக நிறுவனங்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க தேசிய தேர்தல்கள் ஆணையகத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
Post a Comment