10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நாளை ஏற்படுகிறது.
வட மாகாணத்தில் இந்த சூரியகிரகணத்தை தெளிவாக காண முடியும்.
நாளை காலை 8.9க்கு ஆரம்பமாகின்ற இந்த சூரிய கிரகணம், 11.21 வரை நீடிக்கும்.
இது 3 நிமிடங்கள் மாத்திரம் முழுமையான கிரகணமாக இலங்கைக்கு தென்படும் என்று ஆர்த்தசி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணத்தை வெறுங் கண்களாலோ அல்லது வெயிலுக்கு அணிகின்ற கண்ணாடிகளைக் கொண்டோ நேரடியாக பார்ப்பது ஆபத்தானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கறுப்பு நிறத்திலான எக்ரே அட்டை போன்றவற்றைக் கொண்டும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் கண்பார்வை முழுமையாக இல்லமல் செல்லக்கூடிய ஆபத்தும் உள்ளது.
எனவே சூரிய கிரகணத்தை பார்வையிடுவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகள் இருப்பின் அவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Post a Comment