- பாறுக் ஷிஹான் -
வாக்களித்தால் தான் என்னை சந்திக்க முடியும் இல்லாவிடின் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள பெரிய முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை(25) மதியம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட இளைஞர் குழுவினை சந்தித்த வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில்
யாரும் எல்லாம் கதைக்கலாம்.நான் மனதில் உள்ளதை தான் கதைக்கின்றேன்.என்னிடம் வருவதென்றால் எனக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.அப்போது தான் என்னால் உதவ முடியும்.வாக்களிக்காமல் என்னை நீங்கள் தொந்தரவு செய்ய வேண்டாம்.தற்போது எனது தொலைபேசி இலக்கத்திற்கு 80 வீதமான கோல்கள் தமிழ் முஸ்லீம் மக்களிடம் இருந்து தான் வருகின்றன.எந்த சிங்கள மக்களும் எனக்கு தொலைபேசி எடுப்பதில்லை.ஆனால் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எனது மனைவி மகனை தவிர எவரும் என்னிடம் உரையாடுவதில்லை.ஆனால் தற்போது எல்லோரும் குசலம் விசாரிக்கின்றனர்.
ஆதம்பாவா றஹீம் நான் பொன்னசாமி நான் முனியாண்டி என்று தினமும் தமிழ் முஸ்லீம் மக்களே தொலைபேசியில் என்னிடம் பேசுகின்றனர்.ஆனால் சிறிபாலவோஅப்புகாமியோ சுகுன் எவரும் எனக்கு கோல் எடுப்பது இல்லை.ஆனால் சந்தர்ப்பவாதிகள் போன்று என்னுடன் கதைக்க வேண்டாம் .இங்கு வீதியை பாருங்கள்.எவ்வாறு இருக்கின்றது.வேலைவாய்ப்பு இல்லை .எமது அரசாங்கம் தான் இனி அபிவிருத்திகளை செய்ய உள்ளது.யுத்தத்தை நிறைவு செய்தது யார்.கல்முனை மாநகரம் மஹிந்த ராஜபக்ஸ இல்லாவிடின் இருக்காது.ஹக்கீம் றிசாட் இங்கு என்ன செய்தார்கள் என கேட்க விரும்புகின்றேன் என கூறினார்.என கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில் கல்முனை மாநகர உறுப்பினர் றபீக் மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.
Post a Comment