கல்முனையில் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவு தினம் அனுஷ்டிப்பு..!

NEWS
0


- பாறுக் ஷிஹான் -

கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த உறவினர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் வியாழக்கிழமை ( 26) ஆம் திகதி கல்முனையில் நடைபெற்றது.

இதற்கமைய கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் காலை 9.00 மணியளவில் விஷேட துஆ பிராத்தனை இடம்பெற்றது.அத்துடன் சூரிய கிரகணத் தொழுகை கல்முனை முஹ்யித்தீன் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004 இல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பகுதி
அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.









Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top