முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதினுக்கு எதிராக பல முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறும் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
ரிசாத் கைது செய்யப்பட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்க வேண்டும். பிணை பெற முடியாத விசேட உயர் நீதிமன்றத்தில் தினமும் வழக்கு விசாரித்த பின்னர் அவருக்கு எதிராக தண்டனை வழங்க வேண்டும் என தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ரிசாத்தை கைது செய்வது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீளமான கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தொடர்ந்து வெளியே சுதந்திரமாக இருந்தால் இலங்கையினுள் இனவாதம், மதவாதம், சுற்றுசூழல் பாதிப்பு போன்றைவை வேகமாக அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment