ஈரானில் 176 பயணிகளுடன் தரையில் விழுந்து வெடித்து சிதிறிய உக்ரைன் விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டிருக்கலாம் என அல் ஹதாத் செய்தி நிறுவனம் தெரிவத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் உள்ள கோமெய்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரேனிய விமானமான போயிங் 737, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், நடுவானிலிருந்து எரிந்துக்கொண்டே விழுந்த விமானம் தரையில் மோதியவுடன் வெடித்துச்சிதறுகிறது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 9 விமானக் குழுவினர் பயணித்ததாக ஈரானிய விமானப் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றங்கள் நிலவி வரும் நிலையில் உக்ரைன்விமானம் ஈரானிய ஏவுகணையால் தற்செயலாக சுடப்பட்டிருக்கலாம் என்று ஜோர்டானைச் சேர்ந்த அல் ஹதாத் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
Post a Comment