Top News

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல் குற்றவியல் விசாரணைகளை தொடர்வதில் பின்னடைவு ..!


கடந்த வருடம் மேல், கிழக்கு மாகா­ணங்­களில் 8 இடங்­களில் நடாத்­தப்­பட்ட உயிர்த்த ஞாயி­று­தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணைகள் பாதிப்­ப­டையும் நிலை­யி­லுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

குறித்த தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் மற்றும் சி.ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் அதி­கா­ரிகள் பல­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள இட­மாற்றம் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் ஓய்வை அடுத்து இந்­நி­லைமை ஏற்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

கரை­யோர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்டுவாபிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சியோன் தேவா­லயம் ஆகி­யன தாக்­கு­த­லுக்­கி­லக்­கான கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளாகும்.

இத­னை­விட கொழும்பு, காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன. மேற்­படி ஆறு தாக்­கு­தல்­களும் இடம்­பெற்­றது ஏப்ரல் 21 ஆம் திகதி காலை 8.45 மணிக்கும் 9.30 மணிக்கும் இடை­யி­லான 45 நிமிட இடை­வெ­ளி­யி­லேயே ஆகும்.

இந் நிலையில் அன்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் தெஹி­வளை பொலிஸ் பிரிவின் மிரு­கக்­காட்சி சாலைக்கு முன்­பாக உள்ள ‘ நியூ ட்ரொபிகல் இன்’ எனும் சாதா­ரண தங்கு விடுதி கொண்ட ஹோட்­டலில் குண்டு வெடிப்புச் சம்­பவம் பதி­வா­னது.

அதனைத் தொடர்ந்து பிற்­பகல் 2.15 மணி­ய­ளவில், குண்­டு­வெ­டிப்­புடன் தொடர்­பு­டை­ய­தாக கூறப்­படும் சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்கு சென்ற கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களை இலக்கு வைத்து தெமட்­ட­கொட மஹ­வில கார்டின் பகுதி சொகுசு வீட்டில் பெண் தற்­கொலை குண்­டு­தா­ரி­யினால் தாக்­குதல் நடாத்­தப்பட்­டது.

இந் நிலையில் இவை தொடர்பில் சி.ஐ.டி.இன் 15 சிறப்பு குழுக்­க­ளும் சி.ரி.ஐ.டி. என­ப்படும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவும் விசாரணைகளை முன்­னெ­டுத்­தன. இந்த அனைத்து விசா­ர­ணைகள் தொடர்­பிலும் சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி. ஆகிய­வற்­றுக்கு பொறுப்­பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவே ஆலோ­ச­னை­களை வழங்கி மேற்­பார்வை செய்து வந்தார். அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் திக­தி­யுடன் ஓய்வு பெற்ற நிலையில், அவ­ருக்கு விசா­ர­ணை­களை கருத்தில் கொண்டு பதவி நீடிப்பு வழங்­கவும் நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டி­ருக்­க­வில்லை.

இத­னை­விட, இந்த விசா­ர­ணை­களை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவி­ரத்­னவின் கீழ் ஒருங்­க­மைத்த இரு பிர­தான அதி­கா­ரிகள் முன்னாள் சி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­க­ரவும், சி.ரி.ஐ.டி. முன்னாள் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜய­சிங்­கவும் ஆவர். ஜனா­தி­ப­தி­யாக கோத்­தா­பய ராஜ­பக் ஷ பதவி ஏற்று சில நாட்­க­ளி­லேயே சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஷானி அபே­சே­கர சி.ஐ.டி.யிலி­ருந்து மாற்­றப்­பட்ட நிலையில், தற்­போது அவர் பொலிஸ் திணைக்­க­ளத்தின் பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக பணி இடை நிறுத்தம் செய்­யப்பட்­டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் ஜய­சிங்க, பயங்­கர­வாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரி­வி­லி­ருந்து பொலிஸ் ஒழுக்­காற்று பிரி­வுக்கு மாற்றபட்டுள்ளார்.
இத­னை­விட, அவர்­களின் கீழ் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர்கள், பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர்கள் பலருக்கும் அவர்­க­ளது கட­மையை முன்­னெ­டுக்க தடங்­கல்கள் ஏற்­பட்­டுள்ளன.

அத்­துடன் இந்த விசா­ர­ணை­களில் சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட இண்­டர்போல் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யான பொலிஸ் அத்­தி­யட்சகர் வெத­சிங்­கவும் பொலிஸ் நலன்­புரி பிரி­வுக்கு மாற்றப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பிலான அடிப்படை குற்றவியல் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை இதுவரை முன்னெடுத்த வேகத்தில், கோணங்களில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமை யகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Previous Post Next Post