( ஏ.எச்.எம். பூமுதீன் )
2020 - பாராளுமன்ற தேர்தலின் − அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இலக்கு 12 ஆசனங்களைப் பெறுவது என்பதே.
இந்த இலக்கு சாத்தியமா ? இல்லையா ? என்ற வாதப் பிரதிவாதங்களின் பின்னரான இறுதி முடிவு , " ஆம் சாத்தியம்" என்பதாகும்.
2015 பாராளுமன்ற தேர்தலின் போது இந்த இலக்கு மயிரிழையில் தவறிப் போனது என்பது பலருக்கு மறந்து போயிருக்கலாம்.
வன்னி , மட்டக்களப்பு , திருகாணமலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் மக்ககள் காங்கிரஸ் தலா ஒவ்வொரு ஆசனங்களை பெற்றுக்கொண்்டது. இந்த 4 ஆசனங்களுக்காகவும் ஒரு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதற்கமைய 5 ஆசனங்களுடன் ரிஷாட் பதியுதீன் தலைமையில் மக்கள் காங்கிரஸ் பாராளுமன்றுக்குள் நுழைந்தது.
அன்று , ஜ.தே.க வுடனான ஒப்பந்தத்தின் படி 5 ஆசனங்களை பெற்றுக்கொண்டால் 2 தேசியப்பட்டியல் என்றும் − 8 ஆசனங்களைப் பெற்றால் 4 தேசியப்பட்டியல் என்றும் முடிவாகியிருந்தது.
( முகா 5 ஆசனங்களைப் பெற்றதால் 2 தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே..)
2015 − பாராளுமன்ற தேர்தலில் , மக்கள் காங்கிரஸ் புத்தளம் , குருநாகல் மற்றும் அம்பாரை மாவட்டத்தில் தனித்தும் போட்டியிட்டிருந்தது.
புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சுமார் 2000 இற்குட்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அஇமகா வேட்பாளர்களான நவவி மற்றும் டொக்டர் ஷாபி ஆகியோர் தோல்வியடைந்தனர். இவர்ககள் இருவரும் பாராளுமன்றுக்கு தெரிவாகும் அடுத்த நிலையில் உள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் கட்சியின் தலைவர் வெற்றி பெற − 2 ஆவது ஆசனம் வெறும் 700 வாக்குகள் குறைவால் இழக்கப்பட்டது.
அம்பாரை மாவட்டத்தில் அஇமகா தனித்து போட்டியிட்டு 33200 வாக்குகளை பெற்றுக் கொண்டாலும் ஆசனம் கிடைக்கவில்லை. இங்கு 1200 வாக்குகளால் ஆசனம் பறிபோனது.
இதன்படி சொற்பளவான வாக்குகளால் 4 ஆசனங்களை இழந்தது மக்கள் காங்கிரஸ்.
ஆக இந்த 4 ஆசனங்களும் கிடைத்திருந்தால் , வெற்றி பெற்ற 4 ஆசனங்களுமாக மொத்தம் 8 ஆசனங்களள் கிடைக்கப்பெற்று ஜ.தே.க . ஒப்பந்தத்தின் படி 4 தேசியப்பட்டியலுடன் 12 ஆசனங்களை அன்றே மக்கள் காங்கிரஸ் பெற்றிருக்கும்.
12 ஆசனங்கள் என்ற இந்த இலக்கு இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவத்தை பொறுத்தவரை மிக இலகுவான இலக்கே ஆகும்.
பொதுஜன பெரமுன கூறுவதைப் போன்று மூன்றில் இரண்டைப் பெறவும் முடியாது , சஜித் நினைப்பதைப் போன்று 113 ஆசனங்களை பெறவும் முடியாது.
ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளையே − பொதுஜன பெரமுன எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பெறும் என எடுத்துக்கொண்டாலும் 103 அல்லது 105 ஆசனங்களே கிடைக்கும். எனினும் , ஜனாதிபதித் தேர்தல் போன்றதல்ல பாராளுமன்ற தேர்தல் என்பதையும் மொட்டு ஆதரவாளர்கள் விரும்பியோ விருப்பமின்றியோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
ஐ.தே.கவுடன் இணைந்து சில இடங்களில் மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டாலும் − தேசியப்பட்டியல் விவகாரத்தில் ரிஷாத் பதியுதீன் முன்வைக்கும் நிபந்தனைகளை அந்தக் கட்சி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதுபோல் , ஹக்கீம் மற்றும் மனோ கனேசனின் நிபந்தனைகளையும் ஏற்கத்தான் வேண்டும்.
அஇமகா − முகா ஒன்றுபட்டு பொதுச் சின்னத்தில் களமிறங்கினாலும் 12 ஆசனங்களை பெறுவது என்ற தனது வியூகத்தில் மக்கள் காங்கிரஸ் தலைவர் தெளிவாகவே இருக்கின்றார்.
2015 − பாராளுமன்ற தேர்தலில் இழக்கப்பட்ட 4 ஆசனங்களையும் 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியங்கள் நிறையவே உள்ளன. முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் சிறந்த தெளிவை பெற்றுக் கொண்டுள்ளது.
சமூகத்திற்காக பல தியாகங்களை செய்கின்ற தலைமைத்துவமாக ரிஷாட் பதியுதீனை முஸ்லிம்கள் இனம் கண்டுள்ளார்கள். சமூகம் மீதான இனவாதிகளின் பல குற்றச்சாட்டுக்களை தன் தோள் மீது ரிஷாட் சுமந்து கொண்டதை முஸ்லிம்கள் நேரடியாகவே அண்மைக் காலங்களில் அவதானித்துக் கொண்டார்கள்.
முஸ்லிம் சமூக விவகாரங்களில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதை தடுத்து நிறுத்த , தாம் நினைத்தது போல் சமூகத்தை பந்தாடுவதை ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டுமானால் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும். முஸ்லிம்களின் துணையின்றி 113 அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக முஸ்லிம்கள் அணைவரும் மக்கள் காங்கிரஸுடன் கைகார்க்க வேண்டும் , ரிஷாட் பதியுதீனை பலப்படுத்த வேண்டும்.
ACMC இன் இலக்கு 12 ஆசனங்கள்.......
Post a Comment