கொழும்பு பல்கலைக்கழகத்தில் இந்த கருப்பு அபாயா பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் அனேகமாக கிராம பகுதிகளைச் சேர்ந்த சீனியர் மாணவிகளே.
இது எனது மகளுக்கு நடந்த என் மனதுக்கு வேதனையை தந்த ஒரு சம்பவம். இதனைக் கேள்வியுற்றதும் நான் நேரடியாக அந்த மாணவிகளை தேடிச் சென்று இந்த அநியாயத்தை தட்டிக் கேட்டேன்.
தொழுகையோடும், பிரார்த்தனைகளோடும், எதிர்பார்புகளோடும் ஆரம்பித்தது அந்த ஜனவரி 09ம் திகதி நாள். கடந்த ஏப்ரல் 21ம் திகதிய மிருகத்தனமான நிகழ்வுகளுக்குப் பிறகு பொது இடங்களுக்கு பெண் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது ஓர் இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது. அன்றும் அப்படித்தான். பெரும்பான்மை சமூக மாணவர்களால் ஏதும் இடையூறுகள் வருமோ என்ற ஒரு மெல்லிய அச்சத்தோடும் முதலாவது நாளில் கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் எனது மகளோடு காலடி வைத்தேன்.
ஆனால் நான் நினைத்ததை விட வி்டயங்கள் நேர்மாறாக இருந்தன. பெரும்பான்மை இன மாணவர்களும் மாணவிகளும் மிகவும் சிரித்த அன்பான முகத்தோடு எங்களை வரவேற்றனர் அவர்கள் எனது மகளுக்கு வழிகாட்டல்களை வழங்கினர்.
பல வர்ண அபாயாக்களோடு முகத்தைச் சுழித்துக் கொண்டு எங்களை கடந்து சென்ற முஸ்லிம் மாணவிகள் அதிகம் பேரை காணக்கூடியதாக இருந்தது. இந்த முகச் சுழிப்பும், தற்பெருமையும் எனக்கு உள்ளுர வேதனையைத் தந்த போதும் அதை எண்ணி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
சகல விதமாக பதிவுகளையும் முடித்துக்கொண்டு ஆங்கில மற்றும் தொழில்நுட்ப பாடங்களுக்கு தயாராக இருந்த எனது மகளை சந்தித்து பேச அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் இருக்கும் இடத்தை அடைந்தேன்.
மகளின் முகத்தில் காலையில் இருந்த மகிழ்ச்சி இருக்கவில்லை. அச்சம் குடிகொண்டிருந்தது. அப்போது தான் தனக்கேற்பட்ட மன உளைச்சலை மகள் என்னிடம் கூறினார். கருப்பு நிற உடை, கருப்ப நிற பை, கருப்பு நிற சப்பாத்து மற்றும் ஹிஜாபை தலைக்கு சுற்றி கட்டாமல் வராமல் வருவேண்டும் என்று ஒரு சீனியர் மாணவி தனக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்ததாக அவர் என்னிடம் கூறினார். ஒரு பயங்கரமான பகிடி வதைக்கான ஒரு முன்னோட்டமும் முன்னெச்சரிக்கையும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
முஸ்லிம்கள் நாட்டில் இக்கட்டான சூழலை எதிா்கொண்டிருக்கின்ற நிலையில் இவ்வாறு செயற்படுவதற்கு இந்த முஸ்லிம் மாணவிகளுக்கு தைரியம் எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வியே என்னில் எழுந்தது.
அந்த சீனியர் மாணவியின் கட்டளைக்கு எனது மகள் தயக்கத்தோடு “தாத்தா என்னிடம் கருப்பு ஆடைகளோ, பையோ, சப்பாத்தோ இல்லை நாங்கள் கருப்பு அபாயா அணிவதும் இல்லை” என்று அவரின் கையை பற்றி தளர்ந்த குரலில் சொல்லி இருக்கிறார்.
மகளின் கைக்கு ஒரு அடி கொடுத்து கையை தட்டி விட்ட அந்த மாணவி “நான் சீனியர் உனக்கு எனது கையைப் பற்ற முடியாது. நான் சொல்லவது போல் வர முடியாவிட்டால் கல்வியை தொடர முடியாது. அப்படி மீறி வந்தால் உன்னை .... பார்த்துக்கொள்வேன்” என்று அச்சுறுத்தல் விட்டு விட்டு சென்றுள்ளார்.
இந்த நிகழ்வின் அச்சத்தால் உளவியல் ரீதியலாக அச்சத்திற்கம் அழுத்தங்களுக்கும் அவர் ஆளாகியிருப்பதை உணர்ந்து கொண்டேன். நான் உடனடியாக சட்ட நடவடிக்கையில் இறங்கினேன். இந்த நாசகார நாதாரிகளின் செயற்பாட்டால் அவர் பல்கலைக்கழக கல்வியை தொடர தயங்கும் உளநிலைக்கு ஆளாகுவாரா என்ற அச்சம் எனக்கு இன்னமும் இருக்கிறது. “ நீ திரும்பி வா உன்னை பார்த்துக் கொள்கிறேன்” என்ற வார்த்தையின் கடுமை என்னையும் காயப்படுத்தி இருக்கிறது.
இந்த பகிடிவதைக்கு பயந்து பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்கள் பல ஆயிரம் நாட்டில் இருப்பதாக நேற்று ஒரு சிங்கள ஊடகவியலாளர் என்னிடம் சொன்னார்.
எது நடந்தாலும் எனது மகள் கருப்பு நிற எந்த ஆடையையும் அணிய தயாரில்லை. ஸஹ்ரானிய சிந்தனையால் பல்கலைக்கழங்களுக்குள் பகிடிவதையாக புகுந்த இந்த அட்டகாசத்தை நான் அனுமதிக்கப் போவதுமில்லை.
சீனியர்கள் என்று இராஜாங்கம் நடாத்தும் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தின் வரலாறு பயங்கரமானது. அடிப்படைவாதத்தோடும், பயங்கரவாதத்தோடும், தீவிரவாதத்தொடும் தொடர்பானது. பல்கலைக்கழகத்திற்குள் இது இன்று நேற்று உருவான பிரச்சினையல்ல. கடந்த இரண்டு வருடங்களாக இந்த கருப்பு அபாயா விவகாரம் பல்கலைக்கழகங்களில் பகிடி வதையாக புகுத்தப்படுகிறது.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகமொன்றில் கருப்பு அபாயா அணிந்த புதிய மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பகிடிவதை தொடர்பான வீடியோ கடந்த வருடம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது ஞாபகமிருக்கலாம்.
பல்கலைக்கழகங்களில் பரவி வருகின்ற அநாகரீகமான, அசிங்கமான, தீவிரவாதத்தோடு தொடர்புபட்ட, இஸ்லாம் அங்கீகரிக்காத இந்த செயற்பாட்டிற்கு எதிராக சமூக ஊடகங்களில் பலர் கருத்து வெளியிட்டு வந்தனா்.
அவ்வாறு கருத்து வெளியிட்டவர்களை கடுமையாக மிகவும் மோசமாக முறையில் திட்டி அவர்கள் சேறு பூசும் நடவடிக்கைகளில் அந்தந்த பல்கலைக்கழக சீனியா் மாணவர்களம், “மஜ்லிஸ்” களில் மறைந்து இருந்த தீவிரவாதிகளும் செய்து வந்தனர்.
பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருந்து கொண்டு ஸஹ்ரானின் சிஷ்யர்கள் பலரும் அதை எதிர்ப்பவர்களுக்கு “குப்பார்” பத்வாவும் கொலை மிரட்டலும் கொடுத்துக்கொண்டிருந்தனர். இந்த கொலை மிரட்டல் கொடுப்பதில் முக்கியமானவனாக இருந்தவன்தான் சாய்ந்தமருதில் ஸஹ்ரானின் சகோதரர்களை இராணுவம் முற்றுகையிட்ட போது அந்த தாக்குதலில் செத்து மடிந்த #மொஹமத் #நியாஸ் என்பவன். இவனோடு இணைந்து கருப்பு அபாயா பகிடிவதையை #குப்பார்களின்_இராஜ்யத்தில் #கருப்பு_அபாயா_என்பது_முஸ்லிம்_பெண்களின் #கலாசார_விழுமியங்களை_காக்கும்_சிறந்த_கருவி என்ற ரேஞ்சில் எழுதித் தள்ளிய முகப்புத்தக முப்திகளும் இருந்தார்கள்.
இன்று இந்த முகப்புத்தக முப்திகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் உள்ள தொடர்புகள் அம்பலமாகியதால் தற்போது கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் நான்காம் மாடியில் உள்ள இருட்டு அறைகளின் சிறைகளில் எட்டு மாதங்களாக கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த வருடங்களில் இந்த கருப்பு அபாயா பகிடிவதை சூடுபிடித்து அனல் கக்கிக்கொண்டிருந்த போது எம்மில் அனேகமானவர்கள் ஊமைகளாக இருந்தார்கள். முஸ்லிம் பிரச்சனைகள் வந்தால் முண்டியடித்துக் கொண்டு அறிக்கை விட்டு புகைப்படங்களை ஊடகங்களில் போட்டுக்கொண்டு தனது கிரடிட் ஐ காத்துக்கொள்ளும் கிள்ளாடிகள் எவரும் இந்த பகிடிவதை பிரச்சினையை ஒரு பொருட்டாக பார்க்கவேயில்லை.
உரிமைக்காக குரல் கொடுப்பதாக வீராய்ப்பு பேசும் எங்கள் ஊடகங்கள் எல்லாம் ஊமைகளாகி இந்த அராஜகத்தை அங்கீகரித்துக் கொண்டுதான் இருந்தன. சிங்களவனால் ஒரு முஸ்லிமுக்கு பிரச்சினை வந்தால் சீறிப்பாயும் இந்த ஊடக வியாபாரிகள் இந்த விவகாரத்தில் ஊமைகளாக இருந்தார்கள்.
சிங்களவன் ஒருவன் முஸ்லிமின் பக்கம் திரும்பி ஒரு குசு விட்டாலும் உறுமி, குமுறி பக்கம் பக்கமாக எழுதும் எங்கள் ஊடகவாதிகள் எல்லோரும் ஊமையாகி கிடந்தார்கள். இந்த அட்டகாசத்தை தனது சொந்த சமூகம் செய்யும் காரணத்தாலேயே இவர்கள் அடக்கி வாசித்தார்கள். அமைதியாக கிடந்தார்கள். சிலவேளை பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாக செயற்பட்ட, வெள்ளை மாளிகையினால் ஆசிர்வாதம் பெற்ற நிதிமூலங்களினால் வளர்க்கப்பட்ட மதவாத, தீவிரவாத ஸஹ்ரான் கும்பலும், அது போன்ற பிற கும்பல்களும் இதற்கு ஆதரவு தரும் நிலையில் செயற்பட்டதும், ஊடகங்களின் இந்த மௌனத்திற்கு ஒரு காரணம் என நான் நம்புகிறேன்.
தீவிரவாதத்தைப் போதித்து தன்னையும், தான் வாழ்ந்த சமூகத்தையும் வெடித்து சிதற வைத்த ஸஹ்ரானை வளர்த்ததற்கான பொறுப்பை புத்தி ஜீவிகள் என தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு அநியாயம் நடக்கும் போது அமைதி காத்த இவர்கள் அனைவரும் ஏற்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் ஸஹ்ரானாலும் அவனின் சிஷ்யர்களாலும் வளர்க்கப்பட்ட இந்த #கருப்பு_அபாயா_பகிடி_வதை_கலாசாரம் முற்றாக ஒழியும் வரை இந்த போராட்டத்தை நாங்கள் தொடர வேண்டும்.
Post a Comment