ரஞ்சன் ராமநாயக்கவின் கைதை வன்மையாக கண்டிக்கின்றோம்..!

NEWS
0 minute read
0

எதிர்க்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அடக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் சரியான பதிலை வழங்குவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பாக கண்டியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க அன்றைய எதிர்க்கட்சியினர் மற்றும் தமது அரசாங்கத்திற்கும் எதிராக பேசியவர். வெளிப்படையாக பேசும் ஒருவரை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தவறு நடந்திருந்தால் அவரிடம் விசாரணை நடத்தலாம். விசாரணை நடத்தி அவரை விடுவிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இவற்றை அரசியல் பழிவாங்கல் இல்லை அரசாங்கத்தின் தலைவர்கள் ஊடகங்களிடம் வந்து கூறினாலும் பொதுமக்கள் இவற்றை அரசியல் பழிவாங்கல் என்ற கருதுகின்றனர் எனவும் ஹக்கீம் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top