Top News

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்புரிமையை மறைமுகமாக பறிக்கும் சதியே வெட்டுப் புள்ளி அதிகரிப்பு...!




விகிதாசார பிரதிநிதித்துவத்தின் கீழ், பாராளுமன்றத் தேர்தல் ஒன்றில், உறுப்பினர் ஒருவரை பெறுவதற்கான தகுதி பெறுவதற்காக ஆகக்குறைந்தது குறித்த மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 12.5% இனை அந்த உறுப்பினர் பெறவேண்டும் என்பதே அரசியல் அமைப்பாக இருந்தது.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் அரசியல் ஞானத்தின் மூலம், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அவர்களின் காலத்தில் தகுந்த தருணத்தில் பேரம் பேசி அவரை வெற்றிபெறச் செய்து 1989 ஆம் ஆண்டு அந்த வெட்டுப்புள்ளி 

5% ஆகக் குறைக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இதன்படி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக 

தெரிவாவதற்கு பண்ணபடுகிற செல்லுபடியான வாக்குகளில் குறைந்தது 5% பெறவேண்டும் என்பதே தற்போதைய சட்டம். 

இதனை பெற்றுத்தந்தது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் வரலாற்றுச் சாதனைகளில் ஒன்று. இதனால் சிறுபான்மை கட்சிகளும் ஜே.வி.பி. போன்ற சிறிய கட்சிகளும் அதிக அளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று வந்தனர் என்பது வரலாறு. 

இந்த வாய்ப்பினை இல்லாமல் செய்யும் நோக்கத்தோடு 

டிசம்பர் 30, 2019 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் இந்த வெட்டுப்புள்ளியை மீண்டும் 12.5% ஆக ஆக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த முயற்சி சிறுபான்மையினரையும் சிறுகட்சிகளின் உறுப்பினர்களையும் பாராளுமன்றம் செல்ல முடியாமல் தடுப்பதற்கான ஒரு சதியாகவே நாம் நோக்க வேண்டியுள்ளது.

இம்முயற்சியானது பல கட்சி ஜனநாயகத்திற்கு குந்தகமான, பங்குபற்றுதலுக்கும் பிரதி நிதித்துவத்திற்குமான உரிமையை பாதிக்கின்ற ஒரு விடயமாகும் என்பதும் தெட்டத்தெழிவானது. 

இதனால் இலங்கை முஸ்லிம் சமூகம் பாராளுமன்ற உறுப்புறுமை எண்ணிக்கையில் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது கசப்பான உண்மையாகும். 

எனவே கொண்டுவரப்படும் இந்த சட்டமூலத்தை தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

எப்படி என்பதே இன்றைய அரசியல் சூழலில் பாரிய சவாலாக அமைகிறது.




Post a Comment

Previous Post Next Post