Top News

வன்னியில், ரிஷாதை தோற்கடிப்போம் !




(ஏ.எச்.எம். பூமுதீன்)

பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துவிட்டது. அரசியல் கட்சிகள் வேட்பாளர் தெரிவில் ஒருபக்கம் களமிறங்க , மறுபக்கம் இப்போதே சிலர் எம்பியாகி விட்டனர்.

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானி அறிவித்தல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி ( மார்ச் 2 − நள்ளிரவுக்குப் பின்னர் − 12.02 இற்கு ) வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறு கலைக்கப்பட்டால் ஏப்ரல் 25இல் தேர்தல் நடத்தப்படும். முஸ்லிம்கள் தலை நோன்பை ( முதலாவது நோன்பு) நோற்றவர்களாக வாக்களிக்கச் செல்ல நேரிடும். 

முஸ்லிம் அரசியல் களம் − என்றுமில்லாத அரசியல் சூட்டை இத்தேர்தலில் எதிர்கொள்ளவுள்ளது. 

முஸ்லிம நபர்கள் தலைமை தாங்கும் அ.இ.ம.கா மற்றும் முகா − இம்முறை எதிர்த்தரப்பு அரசியல் களத்தில் குதிப்பதும் − ஆளும் தரப்பு , மேற்படி இரு கட்சிகளுக்கும் போட்டியாக முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்க உள்ளமையுமே அந்த என்றுமில்லாத சூட்டுக்கு காரணமாக அமையப் போகின்றது. 

கொழும்பு , புத்தளம், கண்டி, வன்னி, குருநாகல், அம்பாரை, களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த சூட்டை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கவுள்ளது. 

இந்த மாவட்டங்களில் மொட்டு கட்சி சார்பாக களமிறக்கப்படும் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றியடைவார்கள் என்பது அப்பட்டமான பொய். இவர்களுக்கு , இந்த மாவட்டங்களில் அளிக்கப்படும் முஸ்லிம் வாக்குகள் முறையே − உதய கம்மன்வில , திசேர, மஹிந்தானந்த அளுத்கமகே, சுமதிபால, தயாசிறி , விமலவீர,ரோஹித மற்றும் சந்திரசேன போன்ற முஸ்லிம் கடும் போக்காளர்களையே வெற்றியடையச் செய்யப்போகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

குருநாகலில் − ஆளுநர் முஸம்மிலும் , அம்பாரையில் − முன்னாள் அமைச்சர் அதாவுள்ளாவும் போட்டியிடுவது இந்த நிமிடம் வரை உறுதியாகியுள்ளது. 

கண்டியில் , முகா தலைவர் ஹக்கீமை தோற்கடிக்க முகவரியற்ற இரண்டு ஹாஜிகளில் ஒருவரை நிறுத்த பேச்சு நடக்கின்றது.

வன்னியில் − அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதியுதீனை தோற்கடிக்க பலரை களமிறக்கவுள்ளது மொட்டு கட்சி. 

மஸ்தான் எம்பி தலைமையில் 7 முஸ்லிம்களும் சுமதிபால என்ற முன்னாள் பிரதியமைச்சரும் களமிறக்கப்படவுள்ளனர். 

மொட்டு 7முஸ்லிம் வேட்பாளர்களும் திட்டமிட்டு முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து − வன்னியில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை அழித்தொழித்து சுமதிபாலவை வெல்லவைக்க வேண்டும் என்பதே இந்த 7 முஸ்லிம் ஏஜெண்டுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள கொந்தராத்தாகும்..

பொதுவாக வேட்பாளர் ஒருவர் , தனது தேர்தல் விளம்பரம் மற்றும் போஸ்டர்களுக்கு வாக்கியமொன்றை போட்டுக் கொள்வார்கள்.

அந்த வகையில் , வன்னி − மொட்டுக் கட்சியின் 7 முஸ்லிம் வேட்பாளர்களும் தத்தமது விளம்பரங்களில் போட்டுக்கொள்ளவுள்ள வசனம் கீழே உள்ளதுதான்.

" வன்னியில் 
ரிஷாதை தோற்கடிப்போம் " என்பது.

நான் அறிந்த வகையில் , 2001 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாறான குழுக்கள் ரிஷாதை தோற்கடிக்க அழகாக வெளிக்கிட்டு வருகின்றார்கள்தான். 

புர்ஹானுதீன் எஞ்சினியர் , நூர் , மர்ஹும் கபூர் என்று அந்த தோற்கடிப்பாளர் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகும். 

2002 , 2004, 2010 , 2015 போன்ற பாராளுமன்ற தேர்தல்களிலும் இவர்களைப் போன்று சிலரும் − பெரும் பணம் , பலம் ,செல்வாக்குமிக்கவர்களும் ரிஷாதை தோற்கடிக்க வன்னியில் முகாமிட்டனர். ஆனால் , அல்லாஹ்வின் துனையுடன் வன்னி மாவட்ட மூவின மககள் ஒன்றுபட்டு ரிஷாத் பதியுதீனையும் வெல்லவைத்து 2010இல் இன்னுமொருவரையும் சேர்த்து பாராளுமன்றம் அனுப்பினான். 

இப்போது 2020 பாராளுமன்றத் தேர்தலுக்கும் ஒரு கோஷ்டி களமிறஙக தயார்படுத்தப்படுகின்றது. 

மேலே கூறிய , வன்னி 7 மொட்டு வேட்பாளர்களுடன் மக்கள் காங்கிரஸ் தலைவருடன் இருந்து உண்டு, உறங்கி , பதவி பெற்று பிக்அப் வாகனம் ஓடி , கொளுத்த அமைச்சு சலுகைகளைப் பெற்றவர்களும் களமிறங்கியுள்ளனர். பயிற்சியும் வழங்கப்படுகின்றது − ரிஷாதை எப்படி தோற்கடிப்பது என்று. 

2001 இலிருந்து இவ்வாறான புல்லுருவிகளைக் கண்டு புளிச்சிப்போன வன்னி முஸ்லிம்களும் தமிழ் , சிங்கள சகோதரர்களும் ஒன்றை மட்டும்தான் கூறுகின்றார்கள் − " மக்கள் காங்கிரஸ் சார்பாக 2 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வன்னியில் பெற்று இந்தப் புள்ளுருவிகளுக்கு இறுதிப் பாடத்தைப் படிப்பிப்போம்" என்று. 

ACMC க்கு வன்னியில் 2 ஆசனங்களை உறுதி செய்வோம்.. இன்ஷா அல்லாஹ்.

Post a Comment

Previous Post Next Post