ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்து தேர்தலில் போட்டியிடுமானால் அதனால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. எனவே கட்சித் தலைமை தொடர்பான குழப்பநிலைக்கு சிரேஷ்ட தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்வொன்றைக் காணவேண் டும். அந்தவகையில் தற்போது கரு ஜயசூரிய இவ்விவகாரத்தில் தலையீடு செய்திருப்பதால் விரைவில் இப்பிரச்சினைக்கு முடிவு கிட்டும் என்று நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைமையில் தொடரும் குழப்பநிலை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
கட்சி உறுப்பினர்கள் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதுடன், அதன் விளைவாக கட்சிக்குள் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால் தற்போது கட்சியின் தலைமை குறித்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தில் ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினரும், சபாநாயகருமான கரு ஜயசூரிய தலையீடு செய்திருக்கிறார். எனவே இந்த விவகாரம் இன்னும் இரு தினங்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று நம்புகின்றோம்.

ஆனால் கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்து தேர்தலில் போட்டியிடுமானால் அக்கட்சியினால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும். எனவே கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளை விரைவாகத் தீர்த்துக்கொண்டு ஒன்றிணைந்து முன்நோக்கிப் பயணிக்கவேண்டும்.
ஒன்றிணைந்து பயணிப்பதெனின் இருதரப்புமே விட்டுக்கொடுப்பதுடன், சில அர்ப்பணிப்புக்களையும் செய்யவேண்டும். அதேபோன்று இவ்விவகாரத்தில் கட்சி யின் சிரேஷ்ட தலைவர்கள் இடையிட்டு தீர்வொன்றைக் காண்பதற்குரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தற்போது கரு ஜயசூரிய தலை யீடு செய்திருப்பதன் மூலம் விரைவில் கட்சித்தலைமை குறித்த குழப்பநிலைக்கு தீர்வு எட்டப்படும் என்றும் நம்புகின்றோம் என்றார்.
Post a Comment