(ஏ.எச்.எம்.பூமுதீன்)
சாய்ந்தமருது மொட்டுக்கே ஆதரவு ; மொட்டு வேட்பாளர் சலீம் என்றும் − நிர்வாகத்தினர் அண்மையில் பிரகடனம் செய்தனர். இந்தப் பிரகடனம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது உண்மை.
சாய்ந்தமருது ஒன்றுபட்டு விட்டது , சாய்ந்தமருதும் அக்கரைப்பற்றும் சேர்ந்தால் மொட்டில் 2 முஸ்லிம் எம்பி நிச்சயம் என்றெல்லாம் பட்டிதொட்டி எங்கும் பேச்சு..
ஆனால் , இவை அனைத்தும் மாயை, ஒருசிலரின் வெற்றுப் பிரகடனம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் சாய்ந்தமருது − மக்கள் காங்கிரஸ் பெண்கள் அணியினர் மாத்திரம்..
சுமார் அரை மணிநேர அழைப்பில் முன்னாள் மேயர் − மக்கள் காங்கிரஸ் உச்சபீட உறுப்பினர் சிராஸின் அழைப்பின் பேரில் ஒன்றுகூட்டப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டார்..
625 சாய்ந்தமருது பெண்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுதான் இன்று அம்பாரை முஸ்லிம் பிரதேசமெங்கும் பேசு பொருள். இந்த நிகழ்வு சாய்ந்தமருது மொட்டு பிரகடணக் காரர்களை − வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட சலீமை மாத்திரமன்றி , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா அடங்கலாக ஒட்டுமொத்த அம்பாரை முஸ்லிம் அரசியலையே புரட்டிப் போட்டுவிட்டது..
சாய்ந்தமருது பிரகடனத்தை அடுத்து அதாவும் சலீமும் எம்பி என்று பேசப்பட்ட இடமெல்லாம் " சாய்ந்தமருதுக்கு எம்பி நிச்சயம் ; மக்கள்காங்கிரஸ் ஊடாக சிராஸ் மூலம் சாத்தியம்" என்று இப்போது பேசுமளவுக்கு சிராஸை வேட்பாளராக அறிவித்த தலைவரின் வேட்பாளர் வியூகம் மக்களால் ஆச்சரியமாக பார்கக்கப்படுகின்றது..
சுமார் 650 பெண்கள் என்பது குறுகிய நேர அழைப்பிற்குள் பங்கு கொண்டவர்களே. நன்கு திட்டமிட்டிருந்தால் 2000 பெண்கள் வரை பங்கு கொண்டிருப்பர்.
இந்தப் பெண்கள் அனைவரும் தத்தமது கணவர்மார் , தந்தைமார் மற்றும் சகாதர சகாதரிகளின் விருப்பத்திற்கு இணங்கவே வந்திரிக்கின்றார்கள் என்றால் , அந்த ஆண்கள் அவர்களின் குடும்பம் , நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் என்று பார்க்கும் போது சாய்ந்தமருதில் மொட்டு ஆதரவாளர்களாக எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை நான் கூற வேண்டியதில்லை.
மறுபக்கம் முகா ஆதரவாளர்ளும் இருப்பதையும் மறுதலிப்பதற்கில்லை. ஆக மொத்தத்தில் மொட்டு ஆதரவாளர்கள் எனும் போது அது வெறும் 500 அல்லது 1000 இற்குள்ளேயே வந்து முடியப்போவது இப்போதே துள்ளியமாக உணரப்படுகின்றது..
அதாவுள்ளா − எப்படியாவது எம்பியாக வேண்டும் என்பதற்காக அவரது " மடத்தனமான " பேச்சுக்கு சாய்ந்தமருது சமூகம் − தமது ஊருக்கு மக்கள் காங்கிரஸ் மூலமாக கைகூடி வரும் எம்பி ஆசனத்தை இழந்து விடக் கூடாது..
சாய்ந்தமருது மக்களின் வாக்குகள் இன்றி கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாரை முஸ்லிம் பகுதியெங்கும் மக்கள் காங்கிரஸ் 45000 வாக்குகளைப் பெற்று , தற்போது 50 ஆயிரம் வாக்கு வங்கியுடன் இருப்பதை சாய்ந்தமருது சமூகம் உணருமாயின்− சாய்தமருதின் 19000 வாக்குகளில் 15ஆயிரத்தையாவது மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் போது சாய்ந்தமருதும் எம்பியொன்றைப் பெற்று மக்கள் காங்கிரஸ் 2 ஆவது ஆசனத்தை பெறவும் வழிவகுக்கும்.
மொட்டில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வெற்றிபெற குறைந்தது 77 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற வேண்டும் என்பதை சாய்ந்தமருது சமூகம் விளங்கிக் கொள்ளா விடயமல்ல.
Post a Comment