- ரனூஸ் முஹம்மட் இஸ்மாயீல் -
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் சகோதரர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்பொழுது எழுந்திருக்கும் நெருக்கடிக்கு தீர்வு காண அர்ப்பணிப்புடன் செயற்படுவதை அண்மைக்காலமாக அவதானித்து வருகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியுடனான இவரது இந்தத் தீராக்காதல்தான் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் நமது தாய் இயக்கத்தை வேஷியாக மாற்றியது என்பதும்....
ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொடுத்த முட்டை அகற்றவே முடியாமல் போனமைக்கான காரணம் என்ன என்பதும் இந்த பொதுத்தேர்தலுடன் இன்ஷா அல்லாஹ் வெளியில் வரும்.
போராளிகள் புரிந்து கொள்வார்கள்...!
எந்த ஒரு தேசியக் கட்சியுடனும் நிரந்தரமாக காரணமின்றிப் பகைத்துக்கொள்வதன் அபாயத்தை இன்று இலங்கை முஸ்லிம்கள் தெளிவாகப் புரிந்திருப்பார்கள் என நம்புகிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவருக்கிருந்த மாயப்புலம் மர்மக்கதைகள் எல்லாம் சேர்ந்துதான் மகிந்த தரப்பை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லீம் பிரிவாக எண்ண வைக்குமளவுக்கு கொண்டு சென்றது.
இன்று சஜித் பிரேமதாச அவர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இடையில் நடை பெரும் கயிறுழுப்பில் சஜித் பிரேமதாச அவர்களுடன் தொடராக இணைபிரியாமல் மகாநாயக்கர்கள் முதல் மக்கள் சந்திப்புக்கள் வரை இழுபட்டுத் திரிவது நமது சமூகத்தை மென்மேலும் சிக்கலாக்கும் என்பதுடன்...
எம் எச் எம் அஷ்ரப் அவர்கள் இருந்த இடத்தில் இருக்கும் ஒரு சமூகத்தின் தலைமை குறிப்பாக அவரது கட்சியின் தலைமை இவ்வாறு திரிவது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற விடுதலை இயக்கம் தனது பாதையினை மறந்து பல வருடங்கள் ஆகி விட்டது எனும் செய்தியை இதைவிட பகிரங்கமாக சொல்ல முடியாதது என்பதே யதார்த்தம்.
எனதருமை இலங்கை முஸ்லிம்களே ..!
சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்குத் தலைமை தாங்க தகுதியற்றவராகிக் கொண்டே வருகிறார்...
பார்ப்போம் காலம் பதில் சொல்லலாம்....
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை , அதேபோன்று எதிரியும் இல்லை. தலைவர் ஹகீம் அவர்கள் செய்வது முஸ்லிம் காங்கிரசை பாதுகாக்கவும் சில விசமிகளிடம் இருந்து தப்பிக்க வைப்பதிற்கான ஒரு காய்னகர்ப்பு என்றே இவ்விடத்தில் பார்ப்பது அவசியம்.ஒரு முட்டிக்குள் சிக்கப்பட்ட ஆட்டு தலை போல் . ஆடு முக்கியமா முட்டி முக்கியமா என்று சிந்தித்துப்பர்த்து எடுக்கும் முடிவாகவே இதை பர்கவேண்டுமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற முடிவிற்கு எந்த சிறந்த தலைவரும் முன்வரமட்டர்கள் என்பதுதான் யதார்த்தம்.எதிர் காலத்தில் கட்சிக்குள் சிறந்த மாற்றங்கள் வர பல வாய்ப்புக்கள் இருக்கலாம் .
ReplyDeletePost a Comment